உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மின் கம்பங்களை மாற்றி தராமல் அலட்சியம்; பாலம் பணி பாதிப்பு

மின் கம்பங்களை மாற்றி தராமல் அலட்சியம்; பாலம் பணி பாதிப்பு

வத்தலக்குண்டு: மின் கம்பங்களை மாற்றி தராமல் மின் துறையினர் அலட்சியம் காட்டுவதால் பாலம் பணிகளில் தொய்வு ஏற்படுவதால் கிராம மக்கள் பாதிக்கின்றனர்.விருவீடு, விராலிப்பட்டி தெப்பத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் நிலக்கோட்டைக்கு குறைந்த தொலைவில் செல்வதற்கு வசதியாக நடகோட்டையில் வைகை ஆற்றின் குறுக்கே ரூ. 12 கோடி மதிப்பில் பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.இதற்கான துாண்கள் ஆற்றில் நிறுவப்பட்ட நிலையில் ஆற்றின் மறுகரையில் பாலம் செல்வதற்கு இடையூறாக இருக்கும் உயர் அழுத்த மின்கம்பங்களை மாற்றி அமைப்பதற்கு மின்வாரியத்திடம் வலியுறுத்தப்பட்டது. இதற்கான செலவின தொகை அனைத்தும் கட்டப்பட்ட நிலையில் மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பங்களை அகற்றி வேறு இடத்திற்கு மாற்றாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.இதனால் விரைந்து முடிக்க வேண்டிய பாலம் பணிகள் தாமதப்பட்டுள்ளன. விரைவில் விடிவுகாலம் பிறக்கும் என எதிர்பார்த்து இருந்த பொதுமக்களும் விவசாயிகளும் ஆற்றுத் தண்ணீரில் கஷ்டப்பட்டு கடந்து செல்லும் நிலை நீடிக்கிறது மின்வாரியத் துறையினர் உடனடியாக மின்கம்பங்களை மாற்றி அமைத்து பாலம் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி