மேலும் செய்திகள்
நிழற்கூடம் இல்லாததால் மக்கள் கடும் அவஸ்தை
20-Nov-2024
எரியோடு; எரியோடு புதுரோடு பஸ் ஸ்டாப் மூலம் சுற்றுப்பகுதி சார்ந்த ஏராளமான கிராம மக்கள் வெளியூர் செல்கின்றனர். இங்கு நெடுஞ்சாலை இடம் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்ததால் பயணியர் நிழற்கூடம் அமைக்க முடியாத நிலை இருந்தது. சில மாதங்களுக்கு முன்னர் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வேடசந்துார் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.10 லட்சத்தில் பயணியர் நிழற்கூடம் கட்டி முடிக்கப்பட்டது. நேற்று நடந்த விழாவில் காந்திராஜன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி, ஊராட்சி தலைவர் செந்தில்வடிவுஇளங்கோவன் முன்னிலை வகித்தனர். தி.மு.க., சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் செல்வம் வரவேற்றார். மாவட்ட கவுன்சிலர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் பார்த்திபன், ஊராட்சி துணைத்தலைவர் ஈஸ்வரிவீரப்பன், தி.மு.க., மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், விவசாய அணி துணை அமைப்பாளர் கரீமுல்லா பங்கேற்றனர்.
20-Nov-2024