மேலும் செய்திகள்
விழிப்புணர்வு கூட்டம்..
14-Nov-2024
மாணவர்களுக்கு பயிற்சிதிண்டுக்கல் : திண்டுக்கல் நி.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விவசாய பாடப்பிரிவு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு சார்பில் 10 நாட்கள் நாற்றாங்கால் பண்ணை அமைத்தல் குறித்து உள்ளுறை பயிற்சி ஆத்துப்பட்டி பிரிவு சித்ரா நர்சரி கார்டனி நடந்தது. தலைமை ஆசிரியர் பீட்டர் வழிகாட்டுதலில் ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை வேளாண் ஆசிரியர் மகேஸ்வரன் செய்தார்.ஊர்வலம்திண்டுக்கல்: திண்டுக்கல் நி.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பசுமை பள்ளித்திட்டத்தின் கீழ் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி ஒழிப்பு ஊர்வலம் நடந்தது. தலைமை ஆசிரியர் பீட்டர் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர் ஞானபிரகாஷ் துவக்கி வைத்தார். போர்சியாமேரி,அருள்ஜெயந்தி,நிர்மலா பங்கேற்றனர். வேளாண் ஆசிரியர் மகேஸ்வரன் ஏற்பாடு செய்தார்.
14-Nov-2024