உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செய்திகள் சில வரிகளில்....

செய்திகள் சில வரிகளில்....

இணையத்தில் டிரான்சிட் பாஸ்திண்டுக்கல் : குவாரிகளுக்கான டிரான்சிட் பாஸ் ஜூன் 9ம் தேதி முதல் இணைய வழியாகவே வழங்கப்பட்டு வருகிறது. பதிவுச்சான்றிதழ் பெற்றவர்கள் திண்டுக்கல்புவியியல் ,சுரங்கத்துறை அலுவலகம் செல்ல வேண்டியதில்லை இணைத்தின் மூலமாகவே அனுமதிகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென கலெக்டர் சரவணன் கேட்டுள்ளார்...........மாணவர் சேர்க்கை தொடக்கம்திண்டுக்கல் : குள்ளனம்பட்டி தொழிற்பயிற்சி நிலையம்(மகளிர்) 2025 ம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை இன்று முதல் நடைபெறவுள்ளது. அசல் சான்றிதழ்களுடன் நேரடியாக வந்து சேரலாம். விவரங்களுக்கு நிலைய முதல்வரை நேரிலோ, 94990 55764 ல் அணுகலாம்..........மீன்பிடி ஒப்பந்தப்புள்ளி வரவேற்புதிண்டுக்கல் : மாவட்டத்திலுள்ள மாவூர்அணை, சிறுவன் குளம், நீலமலைக்கோட்டை, தாமரைக்குளம் நரசிங்கபுரம், ரெங்கசமுத்திரக்குளம் , தருமத்துப்பட்டி புதுக்குளம் ஆகிய 6 கண்மாய்களின் மீன்பிடி உரிமையினை3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்பட்டுள்ளது. விவரங்களை www.tntenders.gov.in ல் அறியலாம். மேலும , நேருஜி நகரில் உள்ள மீன்வளம் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். மாற்றங்கள் ஏதேனுமிருப்பின் இணையதளம் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை