உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  அரிவாள், கத்தி தயாரிப்பில் வடமாநில தொழிலாளர்கள்

 அரிவாள், கத்தி தயாரிப்பில் வடமாநில தொழிலாளர்கள்

வடமதுரை: மத்திய பிரதேசத்தில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் வடமதுரை பகுதியில் முகாமிட்டு கத்தி, மண்வெட்டி, அரிவாள் ஆகியவற்றை சாலையோரத்தில் பட்டறை அமைத்து உடனுக்குடன் செய்து விற்பனை செய்கின்றனர். வடமதுரையில் இரு குழுக்களாக பிரிந்து ரோட்டோரம் தற்காலிக பட்டறைகளை அமைத்துள்ளனர். இரும்பை நெருப்பில் பழுக்க காய்ச்சி சம்மட்டியால் அடித்தும், வெட்டு இரும்பால் வெட்டியும் தேவைப்படும் வடிவத்தை கொண்டு வருகின்றனர். அரிவாள், அரிவாள் மனை,கோடாரி, கத்தி என பலவித பொருட்களை அதே இடத்தில் இவர்கள் தயாரித்து விற்பனை செய்கின்றனர். குறைந்த விலையாக ரூ.100 முதல் 500 வரை பொருட்களை விற்கின்றனர். குறைந்த விலையில் கிடைப்பதால் பலரும் ஆர்வமுடன் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை