என்.பி.ஆர்.,ல் நேர்முக தேர்வு
நத்தம் : நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தின் சார்பாக என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி கட்டடவியல் துறை மாணவர்களுக்கான வளாக நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது.என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் மருதுகண்ணன், வேலைவாய்ப்பு அலுவலர் பி.டி.ஜெ.கே.லில்லியன் கலந்து கொண்டனர். ரெட்டாட் ரிபார் இயக்குனர் செந்தில்குமார் தேர்ந்தெடுத்தார். தேர்வு மாணவர்களுக்கு பொறியியல் ,தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர், வேலைவாய்ப்பு அதிகாரி மற்றும் துறைப் பேராசிரியர்கள் முன்னிலையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.