உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செவிலியர் மாணவர் சங்க மாநாடு

செவிலியர் மாணவர் சங்க மாநாடு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 5500 க்கு மேற்பட்ட செவிலியர் மாணவர்கள் பங்கேற்கும் செவிலியர் மாணவர் சங்க மாநாடு இன்று தொடங்குவதாக இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் சங்கம் நிர்வாகிகள் கூறினர். அவர்கள் கூறியதாவது: இந்திய பயிற்சி பெற்ற செவிலயர் சங்கம் மாநில மாநாடு திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரியில் இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது. இதில் பல்வேறு கலை சார்ந்த போட்டிகள் நடக்கிறது. 5500 க்கும் மேற்பட்ட செவிலிய மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதன் தொடக்க விழாவில் தமிழ் மாநில பயிற்சி பெற்ற செவிலியர் சங்க தலைவர் அனிகிரேஸ்கலைமதி தலைமை வகிக்கிறார். சிவங்கை கலெக்டர் பொற்கொடி, திண்டுக்கல் கலெக்டர் சரவணன், டி.எஸ்.பி., மணிமொழியன் பங்கேற்கின்றனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை