ஆட்சிமொழி பயிலரங்கம்
திண்டுக்கல்: தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வனத்துறை அலுவலக கூட்டரங்கில் ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கம் நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி தலைமை வகித்தார். இப்பயிலரங்கில் பங்கேற்று சிறப்பாக தமிழ்மொழியில் குறிப்பெடுத்து திறன்களை வெளிப்படுத்திய 84 அரசுத்துறை பணியாளர்களுக்கு டி.ஆர்.ஓ., சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் விஜயபாண்டியன், தனி தாசில்தார் சரவணன், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.