உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி கோயில் செல்ல பெனிகுலர் வின்ச் அதிகாரிகள் ஆய்வு

பழநி கோயில் செல்ல பெனிகுலர் வின்ச் அதிகாரிகள் ஆய்வு

பழநி:பழநி முருகன் கோயிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் கோயிலுக்கு வேகமாக செல்லும் வகையில் பெனிக்குலர் வின்ச் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இடங்கள் குறித்து ஹிந்து சமய அறநிலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சச்சிதானந்தம் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வின்ச் ஸ்டேஷன், ரோப்கார் ஸ்டேஷன் அருகே உள்ள இடங்களை அவர்கள் ஆய்வு செய்தனர். பிரெஞ்சு நாட்டு நிறுவன அதிகாரிகளும் உடனிருந்தனர். இதை தொடர்ந்து கோயில் சார்பில் நடக்கவுள்ள கட்டடம், மேம்படுத்தப்பட உள்ள பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

ரோப்கார் சேவை நிறுத்தம்

பழநி முருகன் கோயிலில் நேற்று முதல் (ஜூலை 15) ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டு வருடாந்திர பராமரிப்பு பணிகள் துவங்கின. 31 நாட்கள் இப்பணிகள் நடக்கவுள்ளது. பக்தர்கள் படிப்பாதை , வின்ச் வசதியை பயன்படுத்தி கொள்ள கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி