உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வெயிலில் காக்க வைத்த அதிகாரிகள்; தவித்த மாணவர்கள்

வெயிலில் காக்க வைத்த அதிகாரிகள்; தவித்த மாணவர்கள்

திண்டுக்கல்: நெகிழி மாசுவை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்க 2 மணி நேரம் தாமதாமாகி மாணவர்கள் வெயிலில் நிற்க வைத்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அலைக்கழிப்பு செய்துள்ளது.உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்,மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பள்ளி கல்லூரிகள் இணைந்து நடத்தும் நெகிழி மாசு கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று காலை 8 :00மணிக்கு தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தது.இதில் கலந்து கொள்ள வந்த மாணவர்கள் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு வெளியே நிற்கவைக்கப்பட்டனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் விழிப்புணர்வுக்காக கையில் வைத்திருந்த மஞ்சள் பைகளை தலையில் வைத்து நின்று கொண்டிருந்தனர். ஊர்வலம் தொடங்க தாமதமானதால் மாணவர்கள் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு உள் நிற்க வைக்கப்பட்டனர். இதன் பின் 10:00 மணிக்கு கலெக்டர் சரவணன் தொடங்கி வைத்தார். ஊர்வலம் தலைமை தபால் நிலையம், திண்டுக்கல், பஸ் ஸ்டாண்ட், பூ மார்க்கெட், மணிக்கூண்டு, வெள்ளை விநாயகர் கோயில், ரத வீதி வழியாக மேற்கு தாசில்தார் அலுவலகம் சென்றது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு, தனியார் கல்லுாரிகள் ,செவிலியர் கல்லுாரி ஆகியவற்றிலிருந்து 500க்கு மேற்பட்ட மாணவர்கள் கையில் மஞ்சள் பையுடன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி