மேலும் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் பெண் தர்ணா
28-May-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சரவணன் தலைமையில்நடந்தது. அப்போது திண்டுக்கல் மல்லிகை நகரை சேர்ந்த பரமேஸ்வரி 73, கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.அவர் கூறுகையில், ''பழநியை அடுத்த சிவகிரிப்பட்டியில் எனது கணவருக்கு சொந்தமாக நிலம் உள்ளது. பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் அளவுக்கும், பட்டாவில் இருக்கும் நிலஅளவுக்கும் வேறுபாடு உள்ளது. இதை சரிசெய்ய பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எங்கள் நிலம் அபகரிக்கப்பட்டதாக அச்சம் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். குஜிலியம்பாறை தாலுகா தேவகவுண்டனுாரை சேர்ந்தவர்கள் பள்ளி மாணவ-ர்களுடன் வந்து மனு கொடுத்தனர். அதில், எங்கள் கிராமத்திலிருந்து நேருஜி நகருக்கு செல்லும் பாதையில் சிலர் குழிகளை தோண்டி முட்கள் போட்டு பாதையை அடைத்துவிட்டனர். இதனால் மாணவர்கள் பள்ளி செல்ல முடியவில்லை. அத்தியாவசிய தேவைக்கும், மயானத்துக்கும் செல்லவழியில்லை. பாதையை மீட்டுத்தர கேட்டிருந்தனர்.வேடப்பட்டி பொன்வை நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், வீட்டுமனை பட்டா வழங்க பலமுறை மன அளித்தும் நடவடிக்கை இல்லை. விரைவில் பட்டா வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டிருந்தனர். 293 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் இதன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 16 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சரவணன் வழங்கினார். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார் கலந்துகொண்டனர்.
28-May-2025