உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி கோயில் பிரகாரத்தில் ஓம் முருகா மின் விளக்கு

பழநி கோயில் பிரகாரத்தில் ஓம் முருகா மின் விளக்கு

பழநி; பழநி முருகன் கோயிலில் வடக்கு வெளிப்பிரகார மண்டபத்தில் அமைந்துள்ளது போல் கிழக்கு வெளிப்பிரகாரத்திலும் 'ஓம் முருகா' நியான் மின் விளக்கு பொருத்தப் பட்டுள்ளது. பழநி முருகன் கோயில் வடக்கு வெளிப்பிரகார மண்டபத்தின் மேல் வேலுடன் கூடிய 'ஓம் முருகா' எனும் எழுத்துக்களைக் கொண்ட நியான் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இந்த மின் விளக்கு பஸ் ஸ்டாண்ட், தாராபுரம் ரோடு, கோயமுத்துார் பகுதிகளிலிருந்து வருபவர்களுக்கு இரவு நேரத்தில் மலை மீது தெரியும். ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் இதே போன்ற பெரிய 'ஓம் முருகா' எழுத்துக்களை உடைய நியான் மின்விளக்கு கிழக்கு வெளிப்பிரகார மண்டபத்தின் மேல் பகுதியில் தற்போது பொருத்தப்பட்டுள்ளது. இந்த விளக்கை கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் ரோடு பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் வெகு தொலைவில் இருந்தே கண்டு ரசிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை