உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரூ.70 லட்சம் மோசடியில் மேலும் ஒருவர் கைது

ரூ.70 லட்சம் மோசடியில் மேலும் ஒருவர் கைது

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக அரசு பள்ளி ஆசிரியர்,வழக்கறிஞர் உட்பட மூவரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் என்.எஸ்.நகரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் மாணிக்கம் 55. இவரது மகன் சபரீசுக்கு அரசு வேலை வாங்கி தர உறவினரான கரூரை சேர்ந்த அச்சக உரிமையாளர் அருண்பாலன்42, என்பவரிடம் கேட்டார். இதற்காக ரூ.36 லட்சத்தை அவரிடம் வழங்கினார். குஜிலியம்பாறையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரிடம் அவரது 2 மகள்களுக்கும் மின்வாரியத்தில் வேலை தருவதாக கூறி ரூ. 26 லட்சம், ஆசிரியையாக உள்ள வேடசந்துாரை சேர்ந்த வழக்கறிஞர் சகாயராஜ் மனைவிக்கு பணியிடமாறுதல் பெற்று தருகிறோம் எனக்கூறி ரூ.8 லட்சம் என ரூ.70 லட்சத்தை வாங்கிவிட்டு அருண்பாலன் தலைமறைவானார். திண்டுக்கல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ.,கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் சென்னையில் பதுங்கியிருந்த அருண்பாலனை கைது செய்தனர். இதில் தொடர்புடைய லவக்குமாரை நேற்று கோவையில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !