உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விளைச்சல் குறைவால் வெங்காயம் விலை உயர்வு

விளைச்சல் குறைவால் வெங்காயம் விலை உயர்வு

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு காய்கறி சந்தையில் வரத்து குறைவால் வெங்காயம் விலை உயர்ந்து கிலோ ரூ.130க்கு விற்பனையானது. வத்தலக்குண்டு தினசரி காய்கறி சந்தைக்கு சுற்று கிராமங்களான எழுவனம்பட்டி, மல்லணம்பட்டி, தும்மலப்பட்டி, கீழகோயில்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தென்மேற்கு பருவமழை கை கொடுக்கவில்லை. வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றி வருவதால் வெங்காயம் பயிரிடுவோர் சாகுபடியில் ஈடுபடவில்லை. இதனால் சந்தைக்கு வரத்து குறைந்தது. உள்ளூர் வரத்தை நம்பியிருந்த வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்து ஒட்டன்சத்திரம், மதுரை, திருச்சி பகுதிகளில் இருந்து வெங்காயத்தை வாங்கி வருகின்றனர். இதனால் சில்லரை விற்பனையில் கிலோ ரூ.130க்கு விற்கப்படுகிறது. பல்லாரி ரூ.80க்கு விற்கப்படுகிறது. வெங்காய விலை ஏற்றத்தை சரி கட்டுவதற்காக ஆந்திராவில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்து வியாபாரிகள், கிலோ ரூ.50 என வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ