உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திறந்த வெளி கழிப்பிடமாகும் பழநி பஸ் ஸ்டாண்ட்; பழநி 26 வது வார்டில் தொடரும் அவலம்

திறந்த வெளி கழிப்பிடமாகும் பழநி பஸ் ஸ்டாண்ட்; பழநி 26 வது வார்டில் தொடரும் அவலம்

பழநி, : பழநி நகராட்சி 26வது வார்டில் பாளையம், பாரதிதாசன் சாலை, தம்புரான் தோட்டம், பாரதி நகர், தெற்கு அண்ணா நகர் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனையும் உள்ளது. கட்டட பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அரசு மருத்துவமனை அருகே ஆவின் பாலகம் அமைந்துள்ளதால் இங்கு வாகனங்களை நிறுத்துவதால் ஆம்புலன்ஸ்கள் சென்றுவர சிரமம் உள்ளது. இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தெற்கு அண்ணா நகர் பகுதியில் பன்றி தொல்லை அதிகரித்து வருவதால் நோய் தொற்றுக்கும் வழிவகுக்கிறது. இதன் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் வாங்குவதில் சிரமம் கணேசன், மாவு மில் உரிமையாளர், பாரதி நகர்: பாரதிநகர் சாலைகள் சேதமடைந்துள்ளது. இங்குள்ள சாக்கடைகளையும் துார்வார வேண்டும். ரேஷன் கடை இரண்டு கிலோமீட்டர் துாரம் அப்பால் உள்ளதால் வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. பாளையம் பகுதியில் ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய், கொசு தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்பு அதிகரிக்கிறது பகவதி, சமையல் கான்ட்ராக்டர், பாளையம்: ஐ.எஸ்.ஓ., தரச் சான்றிதழ் பெற்ற பழநி பஸ் ஸ்டாண்ட் முழுவதும் திறந்தவெளி கழிப்பிடமாக உள்ளது. இதனால் பாளையம் பகுதியில் உள்ள சாலையில் பெண் குழந்தைகள் நடந்து செல்ல முடியாத நிலைமையும் ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள பூங்கா சேதமடைந்து பல நாட்களாகியம் சரி செய்யப்படாமல் உள்ளது. பாளைய பகுதியில் உள்ள சுகாதார வளாகம் இடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள இலவச கழிப்பறையை பயன்படுத்தி வருகிறோம். இதுவும் சேதமடைந்துள்ளது. குதிரை வண்டிக்காரர்களின் ஆக்கிரமிப்பும் அதிகரித்து வருகிறது. இலவச கழிப்பறை விரைவில் சீர் சுதா, கவுன்சிலர், (தி.மு.க.,): பாதாள சாக்கடை திட்டம் நிறைவடைந்த உடன் சாலைகள் அமைக்கப்படும். குப்பை முறையாக அள்ளப்படுகின்றன. தெரு நாய் தொந்தரவு குறித்து நகராட்சி நடவடிக்கை எடுக்கும். பன்றி வளர்க்கும் நபர்களுக்கு நகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட் பகுதி இலவச கழிப்பறை சரி செய்யப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். பஸ் ஸ்டாண்ட் பூங்கா அரிமா சங்கத்தின் மூலம் சரிசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் சரி செய்யப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ