உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாதனையாளர் பயிலகம் திறப்பு

சாதனையாளர் பயிலகம் திறப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் போட்டித்தேர்வுகளுக்கு படிப்பவர்கள் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் அமர்ந்து காலை முதல் இரவு வரை பயின்று வருகின்றனர். இதில் பெண்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலை இருந்தது. இதை கருதி வளாகத்தில் பூட்டிய நிலையில் இருந்த கட்டடத்தை சீரமைத்து போட்டித்தேர்வர்களுக்கான பயிலகமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இதையடுத்து கலெக்டர் சரவணன் சாதனையாளர் பயிலகத்தை திறக்க நடவடிக்கை எடுத்தார். தேர்வர்கள் அமர்ந்து படிக்க எதுவாக சிறப்பு கூடாரங்கள் அமைக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், போட்டித்தேர்வு புத்தகங்கள், மின்விசிறி உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.இதை கலெக்டர் சரவணன் திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை