உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / துாய்மை நகராட்சிகளின் பட்டியலில் ஒட்டன்சத்திரத்துக்கு 11 வது இடம்

துாய்மை நகராட்சிகளின் பட்டியலில் ஒட்டன்சத்திரத்துக்கு 11 வது இடம்

ஒட்டன்சத்திரம்: ''துாய்மை நகராட்சிகளின் பட்டியலில் ஒட்டன்சத்திரத்திற்கு 11 வது இடம் கிடைத்துள்ளதாக,'' அமைச்சர் சக்கரபாணி பேசினார். ஒட்டன்சத்திரம் நகராட்சி ஏ.பி.பி. நகர் ,அமர பூண்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை துவக்கி வைத்தும், விருப்பாச்சி ஊராட்சி சாமியார் புதுாரில் புதிய ரேஷன் கடை கட்டடத்தை திறந்து வைத்த அவர் பேசியதாவது: ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை கட்டடத்தை விரைவில் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். தி.மு.க., அரசு பொறுப்பேற்ற 52 மாதங்களில் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ. 320 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் தூய்மை நகராட்சிகளில் ஒட்டன்சத்திரம் 11 வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய அளவில் 329 வது இடத்தை பிடித்துள்ளது. வீட்டை நாம் சுத்தமாக வைத்திருப்பது போல் வீதிகளையும் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்றார். தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, நகராட்சி கமிஷனர் ஸ்வேதா, தாசில்தார் சஞ்சய் காந்தி, தி.மு.க., செயற்குழுகு உறுப்பினர் கண்ணன், கவுன்சிலர்கள் சாந்தி, சண்முகப்பிரியா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை