உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புறக்காவல் நிலையம் திறப்பு

புறக்காவல் நிலையம் திறப்பு

கொடைக்கானல் : கொடைக்கானல் பூம்பாறையில் புறக்காவல் நிலையத்தை எஸ்.பி., பிரதீப் திறந்து வைத்தார் .சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. மேல்மலை கிராமங்களான பூம்பாறை. மன்னவனுார், பூண்டி உள்ளிட்ட 20 க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு போலீஸ் ஸ்டேஷன் தேவை என்ற கோரிக்கை இருந்தது. இதையடுத்து பூம்பாறையில் புற காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இதில் ஒரு எஸ்.ஐ., இரு போலீசார் தொடர்ந்து பணியில் ஈடுபடுவர். இங்கு மேல்மலை மக்களின் புகார்களை பெற்று நடவடிக்கை எடுக்கவும், இப்பகுதியில் உள்ள சமூக விரோத செயல், போதை கலாச்சாரத்தை கண்காணிக்கவும் வாகன நெரிசல், அவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக புற காவல் நிலையம் தொடர்ந்து செயல்படும் என எஸ். பி., பிரதீப் தெரிவித்தார். டி.எஸ்.பி. மதுமதி, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !