உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பழநி நகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு

 பழநி நகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு

பழநி: பழநி நகராட்சியில் நடைபெற்ற அவசரக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. பழநி நகராட்சியில் அவசரக் கூட்டம் நேற்று முன் தினம் மதியம் 3:00 மணிக்கு துவங்கியது. நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி (தி.மு.க.,) தலைமை வகித்தார். கமிஷனர், சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், உதவி பொறியாளர் பாலசுப்பிரமணி, நகர்நல அலுவலர் அரவிந்த், முன்னிலை வகித்தனர். புதிய நியமன உறுப்பினர் ராமசாமி பங்கேற்றார். கூட்டம் துவங்கியதும் தி.மு.க., கவுன்சிலர் விமலபாண்டியன் ,சபா கூட்டங்களில் ஒவ்வொரு வார்டுக்கும் ரூ.10 லட்சம் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அது குறித்து முறையானதிட்டமிடல் செய்த பின் நகராட்சி கூட்டத்தை நடத்த வேண்டும். எனவே கூட்டத்தை ஒத்தி வைக்க நகராட்சி தலைவர் அறிவிக்க வேண்டும் என்றார். இதற்கு அ.தி.மு.க., கவுன்சிலர் ஆறுமுகம் ஒத்திவைப்பதை வழிமொழிகிறேன் என்றார். இதை தொடர்ந்து நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி (தி.மு.க.,), கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ