மேலும் செய்திகள்
பக்தர்களுக்கு நீர்மோர்
04-May-2025
பழநி: பழநி முருகன் கோயிலில் 3வது வின்சின் ரோப் பராமரிப்பு பணி நடந்தது.இக்கோயிலுக்கு சென்று வர வின்ச், ரோப் கார், படிப்பாதை ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இதில் 3 வின்ச் செயல்பட்டு வருகிறது. மூன்றாவது வின்ச், மேம்படுத்தப்பட்டு 72 பேர் பயணிக்கும் வகையில் உள்ளது. வின்சை மேலே இழுத்து, கீழே இறக்க ரோப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 3வது விஞ்சின் ரோப் ஒரு மாதத்திற்கு முன் மாற்றப்பட்டது. அதன் பராமரிப்பு பணிக்காக நேற்று முன்தினம் மதியம் முதல் நிறுத்தப்பட்டது. அப்பணியில் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
04-May-2025