உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி அறங்காவலர் குழு தலைவர் தேர்வு

பழநி அறங்காவலர் குழு தலைவர் தேர்வு

பழநி:பழநி முருகன் கோயில் அறங்காவலர் குழு தலைவராக திருப்பூரை சேர்ந்த சுப்பிரமணியன் தேர்ந்தெடுக்கப்பட்டார்பழநி முருகன் கோயிலுக்கு சேலம் மாவட்டம் புது அழகாபுரம் பகுதியை சேர்ந்த தனசேகர், திருப்பூர் மாவட்டம் கே.பி.என்., காலனியை சேர்ந்த சுப்பிரமணியன், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தும்மிச்சம்பட்டியைச் சேர்ந்த அன்னபூரணி, சின்ன கரட்டுப்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் உட்பட 5 பேர் அறங்காவலர்களாக ஜன. 10 அன்று நியமிக்கப்பட்டனர். இவர்கள் நேற்று பதவி ஏற்று கொண்டனர். இதில் ஒருவரை அறங்காவலர் குழு தலைவராக தேர்ந்தெடுக்க அறநிலையத்துறை உதவி கமிஷனர் லட்சுமிமாலா முன்னிலையில் திருப்பூரை சேர்ந்த சுப்பிரமணியன் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ