உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேடசந்துாருக்கு செப்.25ல் பழனிசாமி வருகை

வேடசந்துாருக்கு செப்.25ல் பழனிசாமி வருகை

வேடசந்துார்: 'தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் ' பிரசாரம் மூலம் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிச்சாமி மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். அதன்படி செப்.25 ல் வேடசந்துார் சட்டசபை தொகுதியில் பிரசாரம் செய்கிறார். வேடசந்துாரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச உள்ள நிலையில் இதற்கான இடத்தை முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தென்னம்பட்டி பழனிச்சாமி, டாக்டர் பரமசிவம், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜமோகன், ஒன்றிய செயலாளர்கள் ஜான் போஸ், பழனியம்மாள், நகர செயலாளர் பாபு சேட் பார்வை யிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ