உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஊராட்சி அலுவலகம் முற்றுகை

 ஊராட்சி அலுவலகம் முற்றுகை

வத்தலக்குண்டு: 100 நாள் வேலை திட்டத்தில் 2 ஆண்டுகளாக பணி வழங்காததால் பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே விராலிமாயன்பட்டி ஊராட்சியில் நாகைய கவுண்டன்பட்டி, சென்மார்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, கோனியம்பட்டி, சாந்திபுரம் கிராமங்கள் உள்ளன. 100 நாள் வேலை திட்டப்பணிகள் ஒரே கிராமத்திற்கு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்தது. இந்நிலையில் நாகையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக பணி வழங்கவில்லை என பெண்கள் உட்பட கிராமத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இவர்கள் வந்த சமயத்தில் பி.டி.ஓ.,க்கள் அலுவலகத்தில் இல்லாததால் அலுவலர்கள் அடுத்தடுத்து வேலைகள் வழங்கப்படும் என கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி