உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ‘கொடை’யில் குவிந்த பயணிகள்

‘கொடை’யில் குவிந்த பயணிகள்

கொடைக்கானல்: தீபாவளி பண்டிகை விடுமுறையால் குளு, குளு நகரான கொடைக்கானலுக்கு கேரளம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டைய மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். அங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, செட்டியார் பூங்கா, வனச்சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர். தொடர்ந்து ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர். இன்று (நவ.,7) வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு லேசான சாரல் மழை பெய்தது. தரையிறங்கும் மேகக்கூட்டம் என நகரின் ரம்யமான சீதோஷ்ண நிலையை அனுபவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !