உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் குவிந்த பயணியர் போக்குவரத்து நெரிசலால் அவதி

கொடையில் குவிந்த பயணியர் போக்குவரத்து நெரிசலால் அவதி

கொடைக்கானல் : ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணியர் நேற்று காலை முதலே கொடைக்கானலுக்கு வாகனங்களில் வந்தனர். இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச் சாவடி, மூஞ்சிக்கல் செவன் ரோடு, ஏரி சாலை சந்திப்பு, அப்சர்வேட்டரி கோக்கர்ஸ்வாக், பாம்பார்புரம் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகன நெரிசல் ஏற்பட்டது.செப்., 28 முதல் போலீசார் போக்குவரத்து மாற்றம் செய்த நிலையில், நேற்று காலை முதலே வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் நகர் பகுதி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.போக்குவரத்து மாற்றம் குறித்து அறிவிப்பு பலகை அமைக்காத சூழலால், புதிதாக வருவோர் குழப்பமடைந்து அப்சர்வேட்டரி ரோட்டில் சென்று திரும்பும் நிலை ஏற்பட்டது.பூம்பாறை, மன்னவனுார் மேல்மலைப் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மலைக் கிராமத்தை சேர்ந்தோர் பல மணி நேர தாமதத்திற்கு பின் கிராமங்களை சென்றடைந்தனர். போக்குவரத்து நெரிசலால், பஸ்கள் டிரிப் கட் செய்ததால் பயணியர் அவதியடைந்தனர். புதிய போக்குவரத்து மாற்றத்திலும் நெரிசல் தீர்ந்தபாடில்லை என்பதால், இதில் கற்றுக் கொண்டதன் அடிப்படையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ