மேலும் செய்திகள்
பி.எம்.டி.சி., பஸ்சை வழிமறித்த யானை
18-Apr-2025
கன்னிவாடி: திண்டுக்கல் மாவட்டம் அழகுமடையில் முகாமிட்டுள்ள யானை கூட்டம் அரசு பஸ்சை வழிமறித்ததால் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.கன்னிவாடி வனச்சரக பகுதிகளில் வாழை, எலுமிச்சை, மிளகு, காபி சாகுபடி நடக்கிறது. தண்ணீர், உணவு தேவைக்காக மலை கிராம விளைநிலங்களில் வன உயிரினங்கள் புகுந்து சேதப்படுத்துவது தொடர்கிறது. இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் யானைகள் விளைநிலங்கள், மெயின் ரோடுகளில் உலா வர துவங்கி உள்ளன. பயிர்களை சேதப்படுத்துவது மட்டுமின்றி நடுரோட்டில் வழிமறிப்பதால் மலை கிராம விவசாயிகள் அச்சத்துடன் நடமாடுகின்றனர்.ஆடலுார், பன்றிமலை, அரியமலை, பேத்தரைக்காடு, காந்திபுரம் பகுதிகளை தொடர்ந்து தற்போது அழகுமடை பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.நேற்று காலை தருமத்துப்பட்டியில் இருந்து ஆடலுார் நோக்கி சென்ற அரசு பஸ்சில் 32 பயணிகள் இருந்தனர். அழகுமடை அருகே நடுரோட்டில் நின்றிருந்த 4 யானைகள் பஸ்சை வழி மறித்தன. பஸ் நிறுத்தப்பட்ட சூழலில் சில நிமிடங்களில் 3 யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன.ஒரு யானை மட்டும் அரசு பஸ் அருகே வந்து உரசியபடி கடந்ததால் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். வனப்பகுதிக்குள் யானைகள் சென்றபின் பஸ் புறப்பட்டது.
18-Apr-2025