மேலும் செய்திகள்
அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
15-Jul-2025
நத்தம்: -தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க வட்டப் பேரவை கூட்டம் நடந்தது. வட்டகிளை தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். செயலாளர் முனியாண்டி, பொருளாளர் ராஜசேகர், இணை செயலாளர் தவநுாதன், துணைத்தலைவர் பொன்னுச்சாமி முன்னிலை வகித்தனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைவராக முனியாண்டி, செயலாளராக பெருமாள், பொருளாளராக அய்யனார் தேர்வு செய்யப்பட்டனர். சங்க நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், சுந்தரபாண்டியன் கலந்து கொண்டனர்.
15-Jul-2025