உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / எச்சரிக்கை பலகையால் மக்கள் அச்சம்

எச்சரிக்கை பலகையால் மக்கள் அச்சம்

குஜிலியம்பாறை: வேடசந்துாரிலிருந்து கூம்பூர் பில்லமநாயக்கன்பட்டி வழியாக புளியம்பட்டி வரை அரசு பஸ் செல்கிறது. இந்த வழித்தடத்தில் புளியம்பட்டி பில்லமநாயக்கன்பட்டி இடையே திண்டுக்கல் கரூர் ரயில்வே லைன் வருகிறது. இந்த லைனை மெயின் ரோடு கடந்து சென்ற நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இதன் அடியில் சுரங்கப்பாதை, கூரை அமைக்கப்பட்டது. இங்கு தண்ணீர் எப்போதும் தேங்குகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். ரயில்வே நிர்வாகம் சார்பில் ஒப்பந்ததாரர்கள் மூலம் ஆயில் இன்ஜின் வைத்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது பொங்கல் விழா முடிந்த நிலையில் 3 நாட்களாக தண்ணீர் வெளியேற்றாத நிலையில் தொடர்மழை பெய்ததால் தண்ணீர் மீண்டும் தேங்கியது. ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கினாலே சுரங்கப் பாதையை கடக்க வேண்டாம் என்ற எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த பொது மக்கள் சுரங்கப் பாதையை கடந்து செல்ல அச்சமடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி