உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆதார் சேவை மையங்களை நாடும் மக்கள்; கூடுதலாக இல்லாததால் அலையும் அவலம்

ஆதார் சேவை மையங்களை நாடும் மக்கள்; கூடுதலாக இல்லாததால் அலையும் அவலம்

ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதார் சேவை மையங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால் பொதுமக்கள் அலைக்கழிப்படும் நிலை உள்ளது. இதன் எண்ணிக்கையை அதிகரித்து மக்களின் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆதார் எண் கட்டாயம் தேவைப்படுகிறது. அரசு நலத்திட்ட உதவிகள் , வங்கி சேவைகள், வருமான வரி கட்டுவதற்கும் ஆதார் எண் கட்டாயமாகும். அரசு தேர்வுகள் போட்டித் தேர்வுகள் என அனைத்து நிலையிலும் ஆதார் எண் அவசியம் ஆகிறது. ஆதார் எண் இருப்பதால் ஆள்மாறாட்டம் இன்றி அரசின் நலத்திட்ட உதவிகள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதி, அலைபேசி எண் உள்ளிட்டவற்றை திருத்தம் செய்வதற்கும் ஆதாரை புதுப்பிப்பதற்கும் ஆதார் சேவை மையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டோக்கன் வழங்கப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆதார் சேவையை அனைத்து மக்களும் எளிதில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மாவட்டம் முழுவதும் ஆதார் சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ...........சிறப்பு முகாம் நடத்தலாமே கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், தலைமை போஸ்ட்ஆபீசில் அரசு ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. புதிதாக ஆதார் எடுப்பதற்கும் ஆதார் திருத்தங்களை செய்வதற்கும் தொலைதுா கிராமங்களை சேர்ந்தவர்கள் அதிகாலையிலே ஆதார் சேவை மையங்களுக்கு வந்து விடுகின்றனர். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கன் கிடைக்காதவர்கள் அடுத்த நாள் வர வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவது தொடர்கிறது. பொது மக்களின் நலன் கருதி ஆதார் சேவை மையங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சிகள் தோறும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு ஆதார் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கலாம். -- செ.வெங்கடேஷ், பா.ஜ., மேற்கு மாவட்ட வர்த்தகப் பிரிவு தலைவர், ஒட்டன்சத்திரம்...................


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Suresh
ஜன 29, 2025 05:44

இதிலும் பிரிவினைவாதிகள் இனம் மொழி பார்த்துதான் செய்கிறார்கள். தமிழகம் முழுவதற்கும் பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் பெற்றோரின் ஆதார் மற்றும் கர்ப்ப பதிவெண்ணைக் கொண்டு பால ஆதார் மற்றும் சாதிச்சான்று முதலியவற்றை சென்னையிலேயே உருவாக்கி அஞ்சல் மூலம் அனுப்பினால் நன்றாக இருக்கும். இடைத்தரகர்கள் தொல்லை தாங்க முடியவில்லை.


Muthu Kumar
ஜன 27, 2025 00:00

In chennai also it is the same I have applied 3 times they were rejected JI WANTS THAT HAS TO BE LIKE PASSPORT WITH NO PROPER SUPPORT AND SERVICES AS USUAL LIKE GOVERMERT SERVCRSS


Suresh
ஜன 29, 2025 05:46

We also suffered like this


Bhaskaran
ஜன 26, 2025 12:01

தபால் அலுவலகத்தில் ஐம்பது ரூபாய் கட்டணம் என்று அறிவிப்பு ஆனால் நூறு ரூபாய் வாங்குகின்றனர் ரசீது கிடையாது வாழ்க மத்திய அரசு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை