உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோடுகளில் சுற்றும் கால்நடைகளால் தடுமாறும் மக்கள்....

ரோடுகளில் சுற்றும் கால்நடைகளால் தடுமாறும் மக்கள்....

ரோடு பள்ளத்தால் அச்சம் : திண்டுக்கல் தாலுகா ஆபிஸ் ரோட்டில் தண்ணீர் குழாய் கேட்வாழ்வு மூடி சேதமடைந்து பள்ளம் உள்ளது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து நடப்பதால் சரி செய்ய வேண்டும். --லோகநாதன், திண்டுக்கல்.--------சேதமான நிழற்குடை : வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் பயணியர் நிழற்குடையின் கூரை சேதமடைந்துள்ளது. இதனால் விபத்து அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். இதை அகற்றிவிட்டு புதிய நிழற்குடை அமைக்க வேண்டும். --- -பிரபு, வடமதுரை.---------ரோட்டில் தேங்கும் கழிவுநீர் : புதர் மண்டிய கழிவு நீர் கால்வாய் ஒட்டன்சத்திரம் நகராட்சி 2வது வார்டு இருளக்குடும்பன்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள கழிவுநீர் கால்வாய் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்லாமல் ரோட்டில் தேங்குகிறது. --வேலுச்சாமி, ஒட்டன்சத்திரம்.------கால்நடைகளால் விபத்து : திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே சுற்றித் திரியும் கால்நடையால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கால்நடைகள் ஆங்காங்கே திரிவதால் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர்.-பழனிச்சாமி, திண்டுக்கல்.---------தொங்கும் மின்விளக்குகள் : புதுச்சத்திரம் ஊராட்சி பொம்மநல்லுார் தெருவில் மின் விளக்குகள் தொங்கிய நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மின் விளக்கை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கி.ரங்கசாமி, பொம்மநல்லூர்.---------தொற்று பரப்பும் கழிவுநீர் : திண்டுக்கல் மாலைப்பட்டி ரோட்டில் சாக்கடை கால்வாய் முறையாக இல்லாத கழிவு நீர் ரோட்டில் செல்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் தேங்குவதால் அதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜா, மாலப்பட்டி.--------குப்பையால் உருவாகும் சீர்கேடு : வடமதுரை புது சித்துவார்பட்டியில் பள்ளி அருகே குப்பை கொட்டப்பட்டு தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. முறையாக மறுசுழற்சிக்கு அனுப்ப ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை வேண்டும்.-சாமிநாதன், அய்யலுார்.-----------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி