உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஆக்கிரமிப்பால் ரோட்டில் நடக்கும் மக்கள்; நெரிசலால் தினமும் அவதி

 ஆக்கிரமிப்பால் ரோட்டில் நடக்கும் மக்கள்; நெரிசலால் தினமும் அவதி

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே பழநி ரோட்டில் டூவீலர்கள் , சிறு வியாபாரிகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் ரோட்டிலே நடந்து செல்லும் நிலை உள்ளது. ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் கிழக்கு பகுதி வழியாக பஸ்கள் நுழைந்து மேற்கு பகுதியில் வெளியேறி செல்கின்றன. தினமும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்கின்றன. ஒட்டன்சத்திரம் வழியாக 24 மணி நேரமும் பஸ் போக்குவரத்து உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் திரும்பும் இடத்தில் பழநி ரோட்டில் டூவீலர்கள் அதிகமாக நிறுத்தப்படுகிறது. இவை நீண்ட நேரமாக அங்கேயே நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு இடையூறாக உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகனங்கள் பாதையிலே நிறுத்தப்படுவதாலும், சிறு வியாபாரிகளின் ஆக்கிரமிப்பு காரணமாகவும் மக்கள் நடந்து செல்ல முடிவதில்லை. இதன் காரணமாக ரோட்டிலே நடந்து செல்வதால் பல நேரங்களில் விபத்துக்கு வழி வகுக்குகிறது. ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வெளியேறும் இடத்தில் பழநி ரோட்டில் டூவீலர்களை நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் ரோடுப் பகுதியை ஒட்டி உள்ள சிறு வியாபாரிகளை சற்று தள்ளி கடைகளை அமைக்க அறிவுரை வழங்க வேண்டும். இப்பகுதியில் நோ பார்க்கிங் போர்டு வைத்து போக்குவரத்து போலீசாரும் கண்காணிக்க வேண்டும். இதனையும் மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ