மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம்
08-Oct-2024
ஒட்டன்சத்திரம் : விஸ்வகர்மா விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் வி. சுரேஷ் கண்ணன், துணைச் செயலாளர் எஸ். சரவணகுமார், நிர்வாகிகள் ராம்குமார், விஜயராஜ், ராம்ராஜ், கணேஷ், செல்லமுத்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், எங்கள் சமூகத்தின் பெயர் விஸ்வகர்மா .தொழில் அடிப்படையில் சாதி சான்றிதழ் ஹிந்து கம்மாளர், ஹிந்து பொற்கொல்லர், ஹிந்து தச்சர்,ஹிந்து சிற்பி என சில மாவட்டங்களில் வழங்கப்பட்டு வந்தது. பல மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்ஹிந்து விஸ்வகர்மா என வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் ஹிந்து விஸ்வகர்மா என்றே சாதி சான்றிதழ் வழங்க வேண்டுகிறோம். மேலும் செப்.17 விஸ்வகர்மா ஜெயந்தி நாளை தமிழக அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
08-Oct-2024