உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிராமக் கடைகளில் விற்கப்படும் பெட்ரோல், டீசல் விற்பனையால்  விபத்து அபாயம்; கலப்படத்தோடு அனுமதியின்றி விற்பதை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கிராமக் கடைகளில் விற்கப்படும் பெட்ரோல், டீசல் விற்பனையால்  விபத்து அபாயம்; கலப்படத்தோடு அனுமதியின்றி விற்பதை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

மாவட்டத்தை பொறுத்தமட்டில் விவசாயமே பிரதானமாக உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான குக்கிராமங்கள் உள்ளன. நவீன தொழில்நுட்பத்தால் விவசாயம் இயந்திர மயமாக்கப்பட்ட நிலையில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் தேவை அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது. மலை சார்ந்த பகுதிகளில் இவை எளிதில் கிடைக்காததால் டீக்கடை, பெட்டிக்கடை, பலசரக்கு மற்றும் பல்வேறு வணிகம் சார்ந்த கடைகளில் பாதுகாப்பற்ற நிலையில் விற்கப்படுகின்றன. இவ்வாறாக விற்கப்படும் டீசல், பெட்ரோல் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய நிலையில், வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது. மேலும் அளவு குறைவுடன், கலப்படம் கலந்து கூடுதல் விலையில் இவை விற்கப்படுகிறது. இதை கண்காணிக்க வேண்டிய போலீசார் மற்றும் எரிபொருள், எண்ணெய் நிறுவனங்கள் இவற்றை ஒரு பொருட்டாக கருத்தில் கொள்வதில்லை. இது போன்ற நிலை கொடைக்கானல் மேல்மலை, தாண்டிக்குடி கீழ் மலை, மலை சார்ந்த ஒட்டன்சத்திரம், நத்தம், பழநி வேடசந்தூர், வடமதுரை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்கிறது. மாவட்ட நிர்வாகம் அனுமதியின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் இடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அத்யாவசிய பொருளான இவ்வகை எரிபொருளை எளிதில் கிடைக்க செய்யும் வகையில் மினி பெட்ரோல், டீசல் பம்புகளை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி