உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி முருகன் கோயிலில் அதிகரிக்கும் பாதயாத்திரை பக்தர்கள் வருகை

பழநி முருகன் கோயிலில் அதிகரிக்கும் பாதயாத்திரை பக்தர்கள் வருகை

பழநி: பழநி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா ஜன.25 நடைபெற உள்ள நிலையில் வெளியூர் பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.பழநியில் ஜன.25ல் தைப்பூச திருவிழா நடக்க உள்ளது. வெளியூர், வெளி மாநில பாதயாத்திரை பக்தர்கள் அதிக அளவில் பாதயாத்திரையாக வருகின்றனர். காலை முதல் வின்ச், ரோப் கார், தரிசன வரிசையிலும் கூட்டம் நிரம்பி வருகிறது. தரிசன வரிசையில் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். வெளி மாநில வாகனங்களால் இலவச வாகன நிறுத்துமிடங்கள் நிரம்பி வழிகிறதுபாதயாத்திரை பக்தர்களுக்கு வழியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். பாதயாத்திரை பக்தர்கள் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இயக்கும் வாகனங்களை குறைந்த வேகத்தில் இயக்கவும், பக்தர்களுக்கு வழிவிட்டு செல்லவும் வாகன ஓட்டிகள் ,தனியார் பஸ் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ