உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை சிறுவர் பூங்காவில் கோளரங்கம்

கொடை சிறுவர் பூங்காவில் கோளரங்கம்

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள சிறுவர் பூங்காவில் மரத்தை அகற்றாமல் கோளரங்கம் அமைக்கும் பணி நடக்கிறது. சர்வதேச சுற்றுலாத்தலமாக உள்ள கொடைக்கானலுக்கு பொழுதுபோக்கு அம்சங்களை விரிவுப்படுத்தும் நோக்கில் நகராட்சியில் ரூ.2.48 கோடி மதிப்பில் சிறுவர் பூங்காவை மறு சீரமைப்பு செய்து கோளரங்கம் அமைக்கும் பணி நடக்கிறது. முதற்கட்ட கட்டுமான பணிகள் நடக்கும் நிலையில் சிறுவர் பூங்கா வளாகச் சுவரை ஒட்டி ராட்சத குங்கிலியம் மரங்கள் உள்ளன. இவ்விரு மரங்களும் அதிக உயரம் உள்ளதாகவும், வேர்ப்பிடிப்பு , உறுதித் தன்மையற்ற நிலையில் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இம்மரத்தை அகற்றி பிளானடோரியம் அமைக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நகராட்சி அதிகாரிகள் செவி சாய்க்காமல் மரங்களை அகற்றாமல் கோளரங்கம் அமைக்கும் பணியை செய்கின்றனர். பொழுதுபோக்கு அம்சங்களுடன் வடிவமைப்பு பெறும் இத்திட்டத்திற்கு இம்மரங்கள் இடையூறையும், விபத்தையும் ஏற்படுத்தும் என்பது அச்சமாக உள்ளது. பணிகள் துவங்கிய நிலையில் மரத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இம்மரங்களை அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை