நெகிழி சேகரிப்பு இயக்கம் துவக்கம்
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்காக நெகிழி சேகரிப்பு விழிப்புணர்வு இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைக்கவும், மஞ்சப்பை, மறுமுறை பயன்படுத்த தக்க சணல் பைகளின் பயன்பாட்டை அதிகரிக்கவும், நீர்நிலைகளில் கொட்டப்படும் நெகிழி பொருட்களை அப்புறப்படுத்தவும் நெகிழி சேகரிப்பு விழிப்புணர்வு இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சார்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார இயக்கம் திண்டுக்கல் ஒய்.எம்.ஆர். பட்டி குளம் அருகே நேற்று நடந்தது. கலெக்டர் சரவணன் துவக்கி வைத்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோட்டைக்குமார், துணை கலெக்டர் (பயிற்சி) ராஜேஸ்வரி சுவி,மேயர் இளமதி, கமிஷனர் செந்தில்முருகன், துணை மேயர் ராஜப்பா, மாநகர் நல அலுவலர் ராம்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன் கலந்து கொண்டனர்.