உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாற்றுத் திறனாளிகளுக்கான நடைமேடை

மாற்றுத் திறனாளிகளுக்கான நடைமேடை

வடமதுரை: வடமதுரை ரயில்வே ஸ்டேஷனில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி களுக்கு உதவும் வகையில் நடைமேடை பணி நடக்கிறது. வடமதுரை ரயில்வே ஸ்டேஷனில் 1998 ல் அகல ரயில்பாதையாக மாறியபோது குறைந்த உயர நடைமேடை அமைக்கப்பட்டது. தற்போது நாகர்கோவில் சென்னை இடையே இருவழி ரயில் பாதை திட்டத்தில் அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் புதிய நடைமேடைகள் உயர்மட்டமாக மாறியது. வடமதுரையில் தாழ்வாக இருந்த நடைமேடையை உயரமாக மாற்றியமைக்கும் பணி நடக்கிறது. இதில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சிரமம் இல்லாமல் நடைமேடையை பயன்படுத்தும் வகையில் சிறப்பு தன்மையுடைய 'டைல்ஸ்'பதிக்கப்படுகிறது. பொறியாளர்கள் கூறுகையில், 'மஞ்சள் நிறமுடைய இவற்றில் வட்ட திட்டுகள் பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் தண்டவாள பகுதிக்குள் சென்றுவிடாமல் வழிகாட்டும். இரவில் லேசான வெளிச்சத்திலும் ஒளிரும் தன்மையுள்ளது. இதன் மூலம் ரயில் வரும்போது விலகி இருக்க உதவும் எல்லை கோடாகவும் இருக்கும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை