உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை யில் பிளம்ஸ், பேரிக்காய் விளைச்சல் பாதிப்பு

கொடை யில் பிளம்ஸ், பேரிக்காய் விளைச்சல் பாதிப்பு

கொடைக்கானல்:கொடைக்கானலில் பிளம்ஸ், பேரிக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிளம்ஸ், பேரிக்காய் அதிகம் விளைகிறது. சில ஆண்டுகளாக நோய் பாதிப்டு, சுண்டுப்புழு தாக்குதல், வேர் பகுதியில் தண்டுதுளைப்பான் ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இருந்ததில் தற்போது 20 சதவீத விளைச்சல் மட்டுமே கிடைப்பதாக விவசாயிகள் குமுறுகின்றனர். தோட்டக்கலைத் துறை , தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தினர் ஆய்வு செய்து பிளம்ஸ், பேரிக்காய் விவசாயத்திற்கு புத்துயிர் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.விவசாயி தினகரன் கூறுகையில், ''மலைப்பகுதி முழுதும் காய்த்து குலுங்கும் இப் பழங்கள் குவித்து வைத்து விற்ற காலம் போய் தற்போது காட்சி பொருளாகியுள்ளது. பிளம்ஸ், பேரிக்காய் விவசாயத்தை மீட்டெடுக்க தோட்டக்கலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை