உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் போக்சோ கைதி தப்பி ஓட்டம்

திண்டுக்கல்லில் போக்சோ கைதி தப்பி ஓட்டம்

செம்பட்டி: செம்பட்டியை சேர்ந்த போக்சோ கைதியை போலீசார் திண்டுக்கல் சிறைக்கு டூவீலரில் அழைத்து சென்றபோது தப்பியோடினார்.போடிக்காமன்வாடியை சேர்ந்த கூலித்தொழிலாளி வினித் 25. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி, குழந்தைகளை பிரிந்து வாழ்ந்தார். சில மாதங்களுக்கு முன் இதே ஊரை சேர்ந்த 13 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். செம்பட்டி போலீசார் ஜன. 27ல் போக்சோ வழக்கு பதிவு செய்து ஜன. 30ல் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.நேற்று முன்தினம் இவரை திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த செம்பட்டி போலீசார் சிறையிலிருந்து டூ வீலரில் அழைத்து சென்றனர். நிதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் மீண்டும் சிறையில் அடைக்க டூ வீலரில் அழைத்து சென்றனர்.கலெக்டர் அலுவலகம் அருகே அஞ்சலி ரவுண்டானா பகுதியில் வந்தபோது டூ வீலரில் இருந்து குதித்து தப்பி ஓடினார் இவரை செம்பட்டி போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை