உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக நிதி நிறுவனம் ரூ.3 கோடி மோசடி புகார் அளிக்க போலீசார் அழைப்பு

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக நிதி நிறுவனம் ரூ.3 கோடி மோசடி புகார் அளிக்க போலீசார் அழைப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம்சின்னாளப்பட்டியில் 'பிரைட் வே' என்ற நிதி நிறுவனம் பணத்தை இரட்டிபாக்கி தருவதாக கூறி பொது மக்களிடம் ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக புகார் எழுந்துஉள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க வாருங்கள் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர். சின்னாளப்பட்டியில் 'பிரைட் வே' என்ற தனியார் நிதி நிறுவனத்தில்முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக்கி தருவோம் என 2023ல் அதன் ஊழியர்கள் விளம்பரம் செய்தனர். அதை நம்பி சின்னாளப்பட்டி, நிலக்கோட்டை, வத்தலக்குண்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதில் முதலீடு செய்தனர். சில நாட்களுக்கு மட்டும் பணத்தை இரட்டிப்பாக்கி திருப்பி கொடுத்து 'பிரைட் வே' நிறுவனத்தினர் முதலீடு செய்தவர்களிடம் நன்மதிப்பை பெற்றனர். ரூ.3 கோடி வரை முதலீடு சேர்ந்த நிலையில் பணம் செலுத்தியவர்களுக்கு குறிப்பிட்ட நாளுக்குள் பணத்தை பிரைட் வே நிறுவனத்தினர் இரட்டிப்பாக்கி தரவில்லை. பங்கு சந்தையில் முதலீடு செய்து தருகிறோம் எனக்கூறி நிறுவனத்தினர் தலைமறைவாயினர்.இதுகுறித்து வத்தலக்குண்டு முத்துசென்றாயன் நிலக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். ரூ.3 கோடி மோசடி என்பதால் வழக்கு திண்டுக்கல்மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. அவர்கள் வழக்கு பதிந்து பண மோசடியில் ஈடுபட்ட பிரைட்வே நிறுவனத்தினரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.பிரைட் வே நிறுவனத்தில் பணம் செலுத்தி பணத்தை இழந்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை