உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீஸ் செய்திகள் திண்டுக்கல்

போலீஸ் செய்திகள் திண்டுக்கல்

நகை திருடியவர் கைது திண்டுக்கல்: நத்தம் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜா 42. திண்டுக்கல் நாகல் நகருக்கு ஸ்கூட்டரில் வந்தார். உறவினர் வீட்டு முன்பு ஸ்கூட்டரை நிறுத்தியிருந்தார் .இதன் சீட்டை உடைத்து அதிலிருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை திருடிச்சென்றனர். தெற்கு இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சி.சி.டி.வி., கேமரா பதிவுப்படி திண்டுக்கல் பாறைமெட்டு தெருவை சேர்ந்த தண்டபாணி 31, திருடி சென்றது தெரிய அவரை கைது செய்தனர். இருவர் தற்கொலை பழநி: ஆர்.எப்.ரோடு பகுதியில் உள்ள தனியார் கட்டடத்தில் வசித்து வந்த மத்திய பிரதேசம் சபல்கார் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் துாக்கிட்டு இறந்தார்.பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். * ஏரமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ் 25. நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு இறந்தார். ஆயக்குடி போலீசார் விசாரிக் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !