மேலும் செய்திகள்
விபத்தில் இருவர் காயம்
12-Mar-2025
கத்தியை காட்டி செயின் பறிப்புவேடசந்துார்: நேருஜி நகரை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் பழனியப்பன் .இவரது மனைவி சிவானந்தம் 68 , வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகை , காதில் அணிந்திருந்த தோடை காதோடு அறுத்துச்சென்றார். வேடசந்துார் இன்ஸ்பெக்டர் வேலாயுதம், எஸ்.ஐ., அருண் நாராயணன் தலைமையிலான போலீசார் சி.சி. டிவி., பதிவுகளின்படி குஞ்சுவீரன்பட்டியை சேர்ந்த சக்திவேலை 28, கைது செய்து நகை, கத்தியை பறிமுதல் செய்தனர். சூதாடிய 7 பேர் கைது வடமதுரை : தாமரைப்பாடி மந்தை குளம் பகுதியில் சூதாடிய எரியோடு நந்தகோபால் 65, தாமரைப்பாடி மணிகண்டன் 45, ஷாஜகான் 52, கருப்புசாமி 35, பிச்சை 65, சவுந்தரபாண்டியன் 55, கதிர்வேல் 24 ,ஆகிய 7 பேரை வடமதுரை எஸ்.ஐ.,க்கள் தாவூத் உசேன், முத்துச்சாமி கைது செய்தனர்.ஆசிரியரை தாக்கிய இருவர் கைது வடமதுரை : வேல்வார்கோட்டை மூணாண்டிபட்டியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் கார்த்திக் 27. திண்டுக்கல் தனியார் கல்லுாரியில் பணிபுரியும் இவர் சில மாதங்களாக பெண் ஒருவரிடம் போனில் பேசி வந்தார். இதை பெண்ணின் உறவினரான தன்னாசி பாறைப்பட்டி பிரேம்குமார் 24, கண்டித்தார். ஆனாலும் தொடர்ந்து பேசி வந்ததால் நண்பர் மோர்பட்டி ராகுல்பாரதியுடன் 23 , சேர்ந்து கார்த்திக்கை பீர் பாட்டிலால் தாக்கினர். பிரேம்குமார், ராகுல்பாரதி ஆகியோரை வடமதுரை எஸ்.ஐ., பாண்டியன் கைது செய்தார்.
12-Mar-2025