போலீஸ் செய்திகள் ...
காயங்களுடன் இறந்த முதியவர் திண்டுக்கல்: ரெட்டியார் சத்திரத்தை சேர்ந்தவர் ஞானசேகர். ஆதரவற்ற நிலையில் இருந்தார். திண்டுக்கல் மேற்கு ரத வீதி பின்புறம் உள்ள ராமமூர்த்தி மண்பானை விற்பனை கடையில் பணிபுரிந்து கொண்டே அதன் அருகே சில மாதங்களாக தங்கி வந்தார்.நேற்று காலை 10:00 மணிக்கு நெற்றில் காயம், மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் ஞானசேகர் இறந்து கிடந்தார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.தொழிலாளி பலி வத்தலக்குண்டு: எழுவனம்பட்டி ராஜ் என்பவர் வீட்டை இடித்து அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். சுவர் இடிந்து விழுந்ததில் பெருமாள் 44, பலியானார். வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்தில் வாலிபர் பலி வடமதுரை: அய்யலுார் அருகே சுக்காம்பட்டி எஸ்.குரும்பபட்டியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் செல்வராஜ் 41. நேற்று முன்தினம் இரவு அதே பகுதி கோபிநாத் 37, உடன் டூவீலரில் ஊர் திரும்பினார். கோபிநாத் ஓட்டினார். ஹெல்மெட் அணியவில்லை. தீத்தாகிழவனுார் அருகே ரோடு பாலத்தில் டூவீலர் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். செல்வராஜ் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். கோபிநாத் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். வடமதுரை எஸ்.ஐ., பாண்டியன் விசாரிக்கிறார்.கல்வி அலுவலருக்கு மிரட்டல் குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் - காளிமுத்து 45. இவரது அலைபேசிக்கு ஏப். 17ல் பேசிய நபர் , புங்கம்பாடி அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முறையாக பணிக்கு வருவதில்லை என புகார் கூறி உள்ளார். எழுத்துப்பூர்வமாக புகாராக கொடுங்கள். விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கிறோம் என கல்வி அலுவலர் கூறி உள்ளார். இதற்கெல்லாம் புகாராக கொடுக்க வேண்டுமா என மிரட்டும் வகையில் கூடுதலாக பேசி உள்ளார். குஜிலியம்பாறை போலீசில் புகுார் செய்தும் நடவடிக்கையும் இல்லாததால் நேற்று ஆசிரியர்கள் புடை சூழ போலீஸ் ஸ்டேஷன் சென்ற கல்வி அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க கோரினர். எஸ்.ஐ., கலையரசன் விசாரிக்கிறார்.