உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

டூவீலர் மோதி மூதாட்டி பலி நத்தம்: லிங்கவாடியை சேர்ந்தவர் சமுத்திரம் 71. மே 19 மதியம் நத்தம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். காமராஜர் நகர் தரணி 17, ஓட்டி வந்த டூவீலர் மோதியது. மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று காலை இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.தொழிலாளி பலிவடமதுரை: அய்யலுார் கோடாங்கி சின்னான்பட்டியை சேர்ந்த மில் தொழிலாளி சபரிநாதன் 42. மகன் சஞ்சயுடன் டூவீலரில் வடமதுரை தென்னம்பட்டி பிரிவு அருகே சென்றபோது வேன் மோதியது. இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சபரிநாதன் இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.ஆம்னி வேனில் தீவேடசந்துார்: வேடசந்துார் திருமாணிக்கனுாரை சேர்ந்தவர் சிவக்குமார் 31. ஆம்னி வேனில் நேற்று இரவு 7:00 மணிக்கு ஆத்துமேடு திண்டுக்கல் ரோடு பகுதியில் ஓட்டி சென்றார். இன்ஜின் பகுதியில் தீ பற்றியது. சிவக்குமார், அக்கம் பக்கத்தினர் அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் தீயணைப்பு கருவிகளை எடுத்து வந்து தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை