மேலும் செய்திகள்
பி.ஜி.வி., பள்ளியில் தந்தையர் தினம் கொண்டாட்டம்
16-Jun-2025
நால்வர் காயம்வேடசந்துார் : பெங்களூர் போலீஸ் மோகன் 31. இவரது நண்பர்கள் நரசிம்மமூர்த்தி 48, ராகவேந்திரா 37, வினய் 20, சிவக்குமார் 36, லோகேஷ் 36 ஆகியோர் கேரளா ஐயப்பன் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் பெங்களூர் நோக்கி காரில் சென்றனர். காரை மோகன் ஓட்டினார். திண்டுக்கல் -- கரூர் நெடுஞ்சாலையில் வேடசந்தூர் ரங்கநாதபுரம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர பள்ளத்தில் இறங்கியது. இதில் ராகவேந்திரா, வினய், சிவக்குமார், லோகேஷ் ஆகிய நால்வர் காயமடைந்தனர். கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.தந்தையர் தினம்வடமதுரை : போலீஸ் ஸ்டேஷனில் உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு போலீசார் கேக் வெட்டி கொண்டாடினர். எஸ்.ஐ., பாண்டியன், போலீசார் பங்கேற்றனர். ஸ்டேஷனில் வயதில் மூத்தவரான சிறப்பு எஸ்.ஐ., சார்லசிற்கு கேக்கின் முதல் துண்டு வழங்கப்பட்டு, பின்னர் அனைவருக்கும் வழங்கப்பட்டன.
16-Jun-2025