உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

இருவர் தற்கொலைதிண்டுக்கல்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மாசாணன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன் 36. சிறுமலையில் உள்ள தென்மலையில் தனியார் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். குடும்ப பிரச்னையில் விஷம் குடித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல், பாலகிருஷ்ணாபுரம் ராஜீவ்நகரை சேர்ந்தவர் லெனின் 37. குடும்ப பிரச்னையில் விஷம் குடித்து உயிரிழந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.கஞ்சா விற்ற இருவர் கைதுதிண்டுக்கல்: நல்லாம்பட்டி சிவன் கோயில் அருகே புதர் மறைவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாழைக்காய்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் 25, சேதுராமன் 26 இருவரை தாலுகா போலீசார் கைது செய்தனர். 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !