மேலும் செய்திகள்
டூவீலர் மோதி முதியவர் பலி
12-Sep-2025
கார் விபத்து பலி 2 ஆக உயர்வு வடமதுரை : அரவக்குறிச்சி நல்லுார் குரும்பபட்டியை சேர்ந்தவர் சின்னையா 60. இவரது மனைவி ரஞ்சிதா 55, பேத்திகள் தாரணிகா 7, மவுனிகா 6, நால்வரும் திருமலைக்கேணி உறவினர் வீட்டில் இருந்து ஊர் செல்ல செங்குறிச்சி குருநாதபுரம் அருகே டூவீலரில் நேற்று முன் தினம் சென்றபோது கார் மோதியதில் தாரணிகா இறந்தார். . மற்றவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சின்னையா அன்று இரவு இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர். பெண் தற்கொலை திண்டுக்கல் : ஆர்.எம்.டி.சி.காலனி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சக்தி கணேஷ். இவரின் மனைவி குடியரசி 36. வயிற்றுவலியால் அவதிப்பட்ட இவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தாலுகா எஸ்.ஐ., கிருஷ்ணவேணி விசாரிக்கிறார். விபத்தில் விவசாயி காயம் செந்துறை : களத்துப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி. சின்னச்சாமி 58. இவர் டூவீலரில் கருத்தநாயக்கன்பட்டி பிரிவு சென்ற போது ரோட்டில் கவிழ்ந்தது. சின்னச்சாமி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர். தகராறில் இருவர் கைது வடமதுரை : பாடியூர் பி. கொசவபட்டியை சேர்ந்தவர்கள் காட்டுராஜா 52, காளீஸ்வரி 32.இவர்கள் இடையே முன்விரோதம் இருந்த நிலையில் தகராறு ஏற்பட்டது. இரு தரப்பாக தாக்கி கொண்டனர். மதன் 21, காட்டு ராஜாவை வடமதுரை எஸ்.ஐ., தாவூத் உசேன் கைது செய்தார். காளீஸ்வரி, முத்துலட்சுமி உள்ளிட்ட 4 பேரை தேடுகின்றனர்.
12-Sep-2025