போலீஸ் செய்திகள்
குடும்ப பிரச்னையால் தற்கொலை திண்டுக்கல் : பி.வி.தாஸ் காலனியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பிரதாப் 28. குடும்ப பிரச்னை காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த பிரதாப் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். ........ கடன் பிரச்னையில் தற்கொலை திண்டுக்கல் :செல்லாண்டியம்மன் கோவில் 2வது தெருவை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி செல்வபாண்டி 34 . குடும்ப செலவிற்காக உறவினர்கள், நண்பர்களிடம் செல்வபாண்டி கடன் வாங்கினார். இதனால் கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டதில் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.