உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெண்களை குறிவைத்து ஆபாசம்

பெண்களை குறிவைத்து ஆபாசம்

வத்தலக்குண்டு; வத்தலக்குண்டில் வீட்டின் முன் கோலமிடும் பெண்கள் முன்பாக நிர்வாணமாக நின்று வக்கிர செயலில் ஈடுபட்ட இளைஞரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.வத்தலக்குண்டு கே.கே நகர், ராஜன்நகர் உள்ளிட்ட காந்திநகர் விரிவாக்க பகுதிகளில் அதிகாலையில் தெருக்களில் உலா வரும் இளைஞன் ,கோலம் போடும் பெண்களை ரசித்தவாறு வக்கிர செயலில் ஈடுபட்டு வந்துள்ளான்.அருவருப்பான செயலை கண்டு முகம் சுளிக்கும் பெண்கள் சத்தம் போடுவதற்குள் ஓடிவிடும் அந்த இளைஞர் இது நாள் வரையிலும் யாரிடமும் சிக்கவில்லை. புலம்பலோடு பெண்கள் விட்டு விடுவதால் தன் வேலையை பல இடங்களில் காட்ட தொடங்கி உள்ளான். இளைஞன் வக்கிர செயல் ஈடுபடும் காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதன்படி இளைஞரை பிடித்த வத்தலக்குண்டு போலீசார் அவரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ