உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரேஷன் கடைகளுக்கு பி.ஓ.எஸ்., மெஷின்கள்: அமைச்சர் சக்கரபாணி

ரேஷன் கடைகளுக்கு பி.ஓ.எஸ்., மெஷின்கள்: அமைச்சர் சக்கரபாணி

ஒட்டன்சத்திரம்: தமிழகத்தில் உள்ள 6800 பகுதி ரேஷன் கடைகளுக்கு ரூ.53 கோடி செலவில் பாயின்ட் ஆப் சேல்ஸ் (பி.ஓ.எஸ்.,) மிஷின்கள் வழங்கப்படும்'' என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். ஒட்டன்சத்திரம் பெரியகோட்டை ஊராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மக்களிடமிருந்து மனுக்களை பெற்ற அவர் பேசியதாவது: வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதத்தின் இரண்டாவது சனி, ஞாயிறில் அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் 20 லட்சம் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 6800 பகுதி ரேஷன் கடைகளுக்கு ரூ.53 கோடி செலவில் பாயின்ட் ஆப் சேல்ஸ் (பி.ஓ.எஸ்.,) மிஷின்கள் வழங்கப்படும் என்றார். ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் சஞ்சய் காந்தி, பி.டி.ஓ.,க்கள் காமராஜ், பிரபு பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., காளியப்பன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் மலர்விழிசெல்வி, செல்வராஜ் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !